Skip to main content

காசா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!

Dec 09, 2023 27 views Posted By : YarlSri TV
Image

காசா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்! 

ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin மற்றும் ஈரான் ஜனாதிபதி Ebrahim Raisi ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு சிறப்பு வாய்ந்தது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் சவூதி அரேபியா ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin, Mehran நகருக்கு சென்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.



காசாவின் நிலைமை, உக்ரைன் போர், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் காசா பகுதியில் இடம்பற்ற மனிதாபிமான அவலம் குறித்து முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்துடன், ரஷ்யா மற்றும் இரான் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.



மேலும், மத்திய கிழக்கின் நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், பலத்தீன் மற்றும் காசாவில் நடப்பது படுகொலை எனவும், மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனவும் ஈரான் ஜனாதிபதி Ebrahim Raisi தெரிவித்துள்ளார்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை