Skip to main content

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது!

Dec 08, 2023 28 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது! 

உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான மகா சங்கத்தின் தேரர்கள் ஆகியோர் இணைந்து இமயமலை பிரகடனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.



ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, குறித்த பிரகடனத்தை அவர்கள் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 முக்கிய விடயங்களை 'இமயமலைப் பிரகடனம்' உள்ளடக்கியுள்ளது.



இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.



இதன்போது கருத்துத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.



ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்ததாகவும், வடக்கு கிழக்கு மக்கள் அதனை பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.



புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.



ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை