Skip to main content

புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்படவேண்டும்!

Nov 13, 2023 28 views Posted By : YarlSri TV
Image

புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்படவேண்டும்! 

புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார்.



மன்னாரில் இன்று திங்கட்கிழமை(13) மதியம்   இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்.



அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மீனவர்கள் மத்தியில் கொண்டுவரப்பட்டு அவர்களின் கருத்துக்கள் உள் வாங்க பட வேண்டும்.இந்த சட்டத்தின் ஊடாக மீனவர்கள் தொடர்பில் அனைத்தும் பணிப்பாளரின் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இது மிகவும் ஆபத்தானது.



 எனவே அந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு குறித்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.



அதனை நிறை வேற்றுவதாக இருந்தால் மீனவர்கள் மத்தியில் கருத்து பரிமாற்றத்திற்கு உள்ளாக்கி  அதில் பல விடையங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.



அதே நேரம் புதிய பட்ஜெட்டில் மீனவர்களுக்கான எந்த ஒரு திட்டமும் உள்வாங்கப்படவில்லை எனவும் இத்கு தொடர்பாக அனைவரும் பேச வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.



இதேவேளை பெண்கள் தொடர்பாக வளர்பிறை பெண்கள் அமைப்பின் தலைவி கதிரமலர் றீற்றா வசந்தி கருத்துக்களை முன் வைத்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை