Skip to main content

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்த தீர்மானம் – ஐ.நா-வில் வாக்களிக்காத இந்தியா...

Nov 11, 2023 36 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்த தீர்மானம் – ஐ.நா-வில் வாக்களிக்காத இந்தியா... 

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 20 நாளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் கடும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இதனை தற்காலிமாக ஒத்திவைத்துள்ளது. இருப்பினும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில், அவசரமாக கூடிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ரஷ்யாவும் தீர்மானங்களை முன்வைத்தன.



இதில் அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, சீனா இணைந்து வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்தது. ரஷ்யாவின் தீர்மானம் போதுமான வாக்குகளை பெறாமல் தோல்வியை தழுவியது.



இதனால், மனிதாபிமான போர் நிறுத்தம் கோரி, ஜோர்டன் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பொதுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. ஆனால், இந்த வாக்கெடுப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.



ஹமாஸ் அமைப்பு பற்றிய குறிப்புகள் இடம் பெறாததாலும், ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு கண்டணம் தெரிவிப்பது தொடர்பான குறிப்புகள் இல்லை என்பதால் வாக்களிக்கவில்லை என்று இந்தியா விளக்கமளித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை