Skip to main content

சீரற்ற காலநிலை-விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Nov 07, 2023 17 views Posted By : YarlSri TV
Image

சீரற்ற காலநிலை-விடுக்கப்பட்ட எச்சரிக்கை 

இலங்கையில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வான்பாயும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்.



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது



இதேவேளை, பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனே பிரதேசத்துக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செம்மஞ்சள் நிறத்திலான மண்சரிவுக்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



குறித்த பிரதேசங்களில் மழை தொடரும் நிலையில் மண்மேடுகள், பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் அப்பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை