Skip to main content

இலங்கைக்கு சீனாவில் இருந்து கடலுணவுகள் இறக்குமதி செய்யப்படாது..!

Nov 06, 2023 24 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு சீனாவில் இருந்து கடலுணவுகள் இறக்குமதி செய்யப்படாது..! 

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவுகள் இறக்குமதி செய்யப்படாது அதிலும் வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்பட மாட்டாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்துள்ளார்.



சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.



இந்நிகழ்வில்  கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்துள்ளார்.



பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட  போது இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த  சீனாவே முதலாவதாக கை கொடுத்தது. எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.



மேலும் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது.5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.



இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.



சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. அங்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.



சீன  முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் – என்றும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை