Skip to main content

திமுக, காங்கிரஸ் கட்சிகள் இனி வெறுப்பு அரசியல் செய்யமுடியாது! – அண்ணாமலை..

Nov 05, 2023 22 views Posted By : YarlSri TV
Image

திமுக, காங்கிரஸ் கட்சிகள் இனி வெறுப்பு அரசியல் செய்யமுடியாது! – அண்ணாமலை.. 

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,



கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாயனூர், கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாகவும், அங்கு உள்ள மதுக்கரை சுவர் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லையாகவும் இருந்தது. காசிக்கு நிகரான திருக்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட மகாலட்சுமி கோவில் என புண்ணிய கோவில்கள் பல நிறைந்த தொகுதி இது. சுமார் 1,000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடக்கும் பகுதி.



கடந்த 2022 நவம்பரில் தமிழ்நாட்டின் மாநில திட்ட கமிஷன் அறிக்கையின்படி, கடந்த 30 ஆண்டுகளாக தமிழக மாவட்டங்களின் வளர்ச்சி அடிப்படையில், கரூர் போன்ற மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களைப் போல வளர்ச்சி அடையாமல் சமநிலை இல்லாமல் இருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது.



1993-ல் 27 ஆம் இடத்தில் இருந்த கரூர் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 22 ஆம் இடத்தில் தான் இருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டின் கணக்கின்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டங்கள் தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தியில் 32 சதவீதம் பங்களிக்கிறது. கரூர் மாவட்டத்தின் பங்களிப்பு 1.3 சதவீதம் மட்டுமே.



கரூர் மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய தொகுதியாக கிருஷ்ணராயபுரம் இருக்கிறது. பெரிய அளவில் தொழில் வாய்ப்புகளோ, கல்வி நிறுவனங்களோ இல்லை. வேலைக்காக அனைவரும் கரூர் செல்லவேண்டிய நிலையே உள்ளது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொன்ன திமுக, தமிழகத்தில் சென்னையைத் தாண்டி மற்ற எந்த ஊரை வளர்ப்பதிலும் முனைப்பு காட்டவில்லை.



கடவூர் தாலுகா, கீழப்பகுதி கிராமம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் கருங்கல்லால் தலா 10 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளை, திமுகவைச் சேர்ந்த நிர்வாகி, இயந்திரம் மூலம் இடித்து அகற்றி கருங்கல்லை அவரது தோட்டத்து பண்ணை வீட்டிற்குக் கொண்டு செல்ல, தற்போது, 36 லட்ச ரூபாய் செலவிட்டு தடுப்பணையை மீண்டும் கட்ட கடவூர் ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி பணிகள் நடைபெற்று வருகிறது.



இவர்கள் சொந்த தேவைக்கு அரசு சொத்தை சேதப்படுத்திவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் மீண்டும் தடுப்பணை கட்டும் உரிமையை திமுகவுக்கு யார் கொடுத்தது?



கரூர் மாவட்டத்தில், 12,528 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,52,169 வீடுகளில் குழாயில் குடிநீர், 96,650 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 48,157 பேருக்கு 300 ரூபாய் மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 81,879 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 72,913 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 1270 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்கள் வழங்கியுள்ளார்.



தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் மாவட்டத்திற்கு வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார்.



ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. யாருக்கும் கடன் வழங்கவில்லை. கரூர் மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வெற்றிலை மற்றும் வாழை ஆராய்ச்சி மையம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளுக்குக் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் என திமுக கூறிய ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.



தொகுதிப் பக்கமே வராத பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களை, கிருஷ்ணராயபுர தொகுதி மூக்கணாங்குறிச்சி மக்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள்.



திமுக, காங்கிரஸ் கட்சிகள் இனி வெறுப்பு அரசியல் செய்யமுடியாது. வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை