Skip to main content

தந்தையாகப்போகின்றார் ஹாரி பாட்டர் ஹீரோ...

Mar 28, 2023 17 views Posted By : YarlSri TV
Image

தந்தையாகப்போகின்றார் ஹாரி பாட்டர் ஹீரோ... 

ஹாரிபாட்டர் கதை என்றால் இப்போது வரைக்கும் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதில் கதாநாயகனாக நடித்த டேனியல் ராட்க்ளிஃப் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.



டேனியல் ராட்க்ளிஃப் கடந்த 2001ம் ஆண்டு வெளியான ஹாரி பாட்டர் தி பிலோஷபர் ஸ்டோன் படத்தில் குழந்தையாக நடித்து பிரபலமானவர்.



இந்த ஹாரி பாட்டர் 8 பாகங்களாக 2011வரை வெளியாகி வந்தது. இந்த 8 பாகங்களிலும் அசத்தலாக நடித்த டேனியல் ராட்க்ளிஃப் தற்போது தந்தையாகப் போகிறாராம்.



இவர் 23 வயதிலேயே எரின் டார்க் எனும் நடிகையுடன் காதல் வயப்பட்டு 10 ஆண்டுகளாக தனது காதலியுடன் தனி வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.



இவர்கள் இருவரும் 2013ஆம் ஆண்டு வெளியான கில் யுவர் டார்லிங்ஸ் படத்தில் இணைந்து நடித்ததில் மூலம் காதல் வயப்பட்டார்கள்.



இவ்வாறு காதலில் விழுந்த இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் 10 ஆண்டுகள் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது டேனியல் ராட்க்ளிஃப் அண்மையில் தனது காதலி  கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.



தற்போது 33வயதான டேனியல் ராட்க்ளிஃப் தனது குழந்தைக்காக காத்திருப்பதாகவும் குழந்தையை வளர்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.



ஹாரிப்பாட்டர் ஹீரோ தற்போது தந்தையாகப் போகும் செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வாழ்த்துக்களைத் தெரிவித்து நிரம்பகியிருக்கிறது.  


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

6 Days ago

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

6 Days ago

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை