Skip to main content

“பொன்னியின் செல்வன் - 2” களம் இறங்கினார் கமல்

Mar 27, 2023 15 views Posted By : YarlSri TV
Image

“பொன்னியின் செல்வன் - 2” களம் இறங்கினார் கமல் 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 



இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 



பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் திகதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 



இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இதில் கலந்துக் கொள்ளும் விருந்தினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.



அதன்படி இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 



இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

6 Days ago

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

6 Days ago

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை