Skip to main content

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் படகு சேவை!! திகதி அறிவிக்கப்பட்டது

Mar 26, 2023 59 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் படகு சேவை!! திகதி அறிவிக்கப்பட்டது 

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 முதல்  படகு சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.



அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

 

ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும்.



காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும்.



படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.



காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 



இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை