Skip to main content

அமெரிக்காவில் முதன்முதலாக சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

Mar 26, 2023 79 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் முதன்முதலாக சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு 

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 



அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்தார்.



இந்த சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்க அவர்களது பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும். 



மேலும் அவர்களது கணக்கை பெற்றோர் முழுவதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். 



முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 



இந்த சட்டம் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க உதவும் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை