Skip to main content

ஒரு பாலின சமூகத்திற்கு எதிரான தண்டனையை திருத்த இலங்கை தயாராகின்றது

Mar 23, 2023 61 views Posted By : YarlSri TV
Image

ஒரு பாலின சமூகத்திற்கு எதிரான தண்டனையை திருத்த இலங்கை தயாராகின்றது 

LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக  பயன்படுத்தப்படும் பல தண்டனைச் சட்ட விதிகளை திருத்துவது குறித்து இலங்கையின் பாராளுமன்றம் பரிசீலிக்க உள்ளது.



கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு புதன்கிழமை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டது.



இது குற்றவியல் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளில் ஒருமித்த ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குகின்றன.எனவே இந்த பிரிவுகளை  திருத்தும் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.



தனிநபர் பிரேரணை என்றால் என்ன?



தனிப்பட்ட ஒருவருக்கு, சங்கத்துக்கு அல்லது கூட்டு நிறுவனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அல்லது நலன் விளைவிக்கின்ற நோக்குடன் சட்டமூலமொன்றை அறிமுகம் செய்ய விரும்பும் எவ்வித அமைச்சுப் பதவியையும் வகிக்காத எவரேனும் ஒரு தனியார் உறுப்பினர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வர்த்தமானியிலும் இலங்கைக் குடியரசில் விற்பனையில் உள்ள குறைந்தது ஒரு சிங்கள, ஒரு தமிழ் மற்றும் ஓர் ஆங்கிலச் செய்தித் தாளிலாவது அச்சட்டமூலத்தின் பொது இயல்புகளையும் நோக்கங்களையும் எடுத்துரைக்கும் அறிக்கையொன்றை விளம்பரப்படுத்துவதன் வாயிலாக முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டும்.



அத்தகைய விளம்பரம், சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி கோரும் விண்ணப்பம் செய்யப்படுவதற்குக் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னர் பிரசுரிக்கப்படல் வேண்டும். (நிலையியற் கட்டளை 53(1))


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை