ஒஸ்கார் விடுதை தட்டிச் சென்றது RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல்
Mar 13, 2023 22 views Posted By : YarlSri TV
ஒஸ்கார் விடுதை தட்டிச் சென்றது RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இடம்பெறும் ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.
திரையுலகின் மிக உயிரிய விருதான ஒஸ்கார் விருது 95வது விழாவில் இந்த விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஒஸ்கார் விருதை இந்தியாவின் The elephant whisperers வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த ஆவணப்படத்துக்கான ஒஸ்கார் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை.
சிறந்த ஒப்பனைக்கான ஒஸ்கார் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஒஸ்கார் விருதை பெற்றனர்.
சிறந்த ஒளிப்பதிவுக்கான ஒஸ்கார் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.
An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஒஸ்கார் விருதை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஒஸ்கார் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஒஸ்கார் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஆஸ்கர் விருதை பெற்றார்.
ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஒஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த Visual Effects பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது ´அவதார் தி வே ஆஃப் வாட்டர்´ படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஒஸ்கார் விருதினை பெற்றுக் கொண்டனர்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago