Skip to main content

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல கூட்டமைப்பினர்- கம்மன்பில

Dec 29, 2022 208 views Posted By : YarlSri TV
Image

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல கூட்டமைப்பினர்- கம்மன்பில 

அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரப்பகிர்வை அணுகுவர் என்பதாலேயே, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்தோம். கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் என புதிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுற்றுள்ளன. எனினும், அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது.



பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை, நாம் எதிர்த்ததாகக் கூறுவது அடிப்படையற்றது.



அரசமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை