Skip to main content

இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 11955 வெளிநாட்டவர்கள்!

Dec 27, 2022 103 views Posted By : YarlSri TV
Image

இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 11955 வெளிநாட்டவர்கள்! 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955  வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.



2019ல் அதிக எண்ணிக்கையிலான 898 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



இது தவிர, 2018 இல் 678 வெளிநாட்டவர்களும், 2020 இல் 249 வெளிநாட்டவர்களும், 2021 இல் 130 வெளிநாட்டவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று குடிவரவுத் திணைக்களத்தின் 2021 செயல்திறன் அறிக்கை தெரிவிக்கின்றது.



இந்த அறிக்கையின் படி, 505 விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு நூற்று முப்பது வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 92 இந்தியர்கள், ஒன்பது நேபாள பிரஜைகள், ஏழு நைஜீரிய பிரஜைகள், ஆறு பாகிஸ்தானிய பிரஜைகள், ஐந்து ரஷ்ய பிரஜைகள் மற்றும் இரண்டு மாலத்தீவு பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை