Skip to main content

மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

Oct 25, 2022 52 views Posted By : YarlSri TV
Image

மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு! 

சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், அதனை முதலில் புகைப்படம் எடுத்து தமது பிரதேசத்தில் உள்ள கிராம அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.



இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



மேலும் 'தற்போது ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உணவு மற்றும் பானங்களை வழங்கி வருகின்றது.



400 க்கும் மேற்பட்ட வீடுகள் சிறிய மற்றும் நடுத்தர பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளன.



அவர்களுக்கு அடிப்படைத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதன் பின்னர் மதிப்பீடு செய்து பணம் வழங்கப்படும்.



ஒரு எச்சரிக்கையாக உங்கள் வீட்டிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உடனடியாக பேரழிவின் படங்களை எடுக்கவும். அதை கிராம அலுவலரிடம் காண்பித்து, எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க வேண்டும்.



பிரதேச செயலாளரிடம் கோரிக்கையை சமர்ப்பித்த பின்னர் நிவாரண சேவை நிலையங்கள் பணத்தை வழங்க ஏற்பாடு செய்யும். அத்தகைய வாய்ப்பை யாராவது தவறவிட்டிருந்தால் உடனடியாக கிராமசேவை அலுவலருக்கு அறிவித்து. பிராந்திய செயலாளரிடம் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்.



ஆரம்ப கட்டணமாக 10 ஆயிரம் மற்றும் முழு மதிப்பீட்டிற்குப் பின்னர் மீதமுள்ள கொடுப்பனவு வழங்கப்படும்.



பலத்த சேதம் அடைந்தவர்கள்கூட, முதலில் சேதத்தை புகைப்படம் எடுத்து கிராம அலுவலரிடம் தெரிவித்து சான்றிதழ் பெற வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை