Skip to main content

உக்ரைன் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் ரஷ்யா

Sep 09, 2023 64 views Posted By : YarlSri TV
Image

உக்ரைன் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் ரஷ்யா 

சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலையும் மீறி  ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஆண்டு பெப்ரவரி தொடங்கி போர் நடந்து வருகின்றது.



இந்நிலையில் உக்ரைனில் கடந்த ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட ஆனால் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வராத பகுதிகளில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது.



இதன் ஒருபகுதியாக அங்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.



இதன்படி டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா பிராந்தியங்களில் ரஷ்யாவால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகின்றது. இங்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நாளை தேர்தல் முடிவடைகின்றது.



உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷ்யாவின் செயல்பாடு சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் ஆகும். தீவிரமாக போர் நடத்தும் பகுதிகளில் ரஷ்யா வாக்குப்பதிவை நடத்தவது உக்ரைன் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வாக்கெடுப்பின் முடிவுகளை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டாம்” என்று வலியுறுத்தி இருக்கிறது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை