Skip to main content

சனல் 4 விவகாரம் தொடர்பான கோட்டாபய ராஜபக்சவின் சர்ச்சையில்

Sep 09, 2023 49 views Posted By : YarlSri TV
Image

சனல் 4 விவகாரம் தொடர்பான கோட்டாபய ராஜபக்சவின் சர்ச்சையில் 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.



இந்த அறிக்கையிலேயே பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில்  கோட்டாபய ராஜபக்ச என பொறிக்கப்பட வேண்டிய பெயரானது "குா்டுடுபுா்யு ருா்ஜபுகு்ஷ" என குறிப்பிடப்பட்டுள்ளது.



முன்னதாக அறிக்கை வெளியான பின்னர் பலரும் இந்த விடயத்தை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்ட நிலையில், தற்போது இந்த விடயம் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.



இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய கடிதத் தலைப்பில் தன்னுடைய பெயர் மூன்று மொழிகளிலும் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைக் கூட கவனிக்காமை, தமிழர்கள் மீதான அவரது அக்கறையின்மை அல்லது வெறுப்பினையே வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக தமிழர் உரிமைசார் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.



ஒரு முன்னாள் ஜனாதிபதியின் கடிதத் தலைப்பில் அவரது பெயர், கொட்டை எழுத்தில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூட ஒரு தமிழர் அவர் அருகில் இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவ்வாறெனின், இலங்கையின் முன்னாள் தலைவராக, அவர் எவ்வாறு, தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் விடயம் சார்ந்து அவர் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை