Skip to main content

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளின் தெரிவிப்பு

Sep 06, 2023 39 views Posted By : YarlSri TV
Image

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளின் தெரிவிப்பு 

தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகன இறக்குமதிக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் நேற்று (05.09.2023). குறித்த தகவலை தெரிவித்துள்ளனர்



நேற்று (05.09.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



அரசாங்க நிதி தொடர்பான குழு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய போது குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.



குறிப்பாக இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுத்து கோதுமை மா மற்றும் டைல்ஸ் போன்ற தொழில்த் துறை போன்று, இரட்டை அதிகார வரம்பு நிலைமையை தவிர்க்க வேண்டிய தன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும் என குழு வினவிய போது அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.



இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை