Skip to main content

தலைமுடி உதிர்வை கட்டுக்குள் வைப்பது எப்படி?

Aug 26, 2023 35 views Posted By : YarlSri TV
Image

தலைமுடி உதிர்வை கட்டுக்குள் வைப்பது எப்படி? 

தற்போது இருக்கும் பெண்கள் உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக சந்திக்கும் ஒரு பிரச்சனையாக தலைமுடி உதிர்வு இருக்கின்றது.சாதாரணமாக பெண்களுக்கு தலைமுடி உதிர்வது வழமை தான். ஆனால் இந்த உதிர்வு அதிகமாகும் பொழுது உரிய மருத்துவ குறிப்புக்களை பின்பற்றுவது சிறந்தது.



இந்த பிரச்சினை மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், ஏற்படுகின்றது.அந்த வகையில் மருந்துகள் இல்லாமல் இயற்கையாக எப்படி தலைமுடி உதிர்வை கட்டுக்குள் வைப்பது என தொடர்ந்து பார்க்கலாம்.



1. நெல்லி பொடி



நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனால் தலைமுடி வளர்ச்சி ஊக்கப்படுவதுடன் நரைமுடியைத் தடுக்கப்படுகிறது.



நெல்லிக்காய் பொடியை நீருடன் அல்லது தயிருடன் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்து கொள்ளவும்.குளிக்கும் முன்னர் இந்த கலவையை தலைக்கு தடவ வேண்டும்.இவ்வாறு செய்வதால் தலைமுடி இயற்கையாக பளபளப்பாக இருக்கும். தலைமுடி வளர்ச்சியும் அதிகமாகும். 



2. பிரிங்கராஜ் பவுடர்



தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பிரிங்கராஜ் பற்றி கேள்விபட்டிருப்போம். இதனை தலைக்கு தடவுவதால் மூலிகை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் தலைமுடியின் நிறத்தைப் பராமரிக்க உதவியாக இருக்கின்றது.



பிரிங்கராஜ் பொடியை தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து வைத்து கொள்ளவும்.பின்னர் தலைக்கு நன்றாக தடவி, மசாஜ் செய்து கொள்ளவும்.



சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் இளம் சூடான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.இவ்வாறு தொடரந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால் தலைமுடி பிரச்சினையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.



         



 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை