Skip to main content

பக்தர்களுக்கு எச்சரிக்கை: தொண்டைமானாற்றில் தீடிரென காணப்பட்ட முதலை!

Aug 26, 2023 50 views Posted By : YarlSri TV
Image

பக்தர்களுக்கு எச்சரிக்கை: தொண்டைமானாற்றில் தீடிரென காணப்பட்ட முதலை! 

திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு  சென்ற நபர் ஒருவர் காலை கழுவதற்கு ஆற்றிற்கு சென்றவேளை ஆற்றின் நடுவே முதலையின் தலை தென்பட்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.



வடிவழகையன் என்பவர் இச்சம்பவம் தொடர்பில்  முகநூலில் வெளியிட்ட பதிவு இதோ!



நேற்றுக் காலை திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தொண்டைமானாறு தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு செல்லக வாய்ப்பு கிடைத்தது. முதலில் தொண்டைமானாற்றில் காலைக் கழுவிவிட்டு போவோம் என்று படிகளில் இறங்கினால் "அண்ணா அங்கை பாருங்கோ முதலை" என்றார் ஒருவர்.



பார்த்தால், ஆற்றின் நடுவே ஒரு முதலையின் தலை தண்ணீருக்கு வெளியே வெளித்தெரிவதும் போவதுமாய் இருந்தது. எனக்கு சரியான ஆத்திரம் தான் வந்தது.



மக்கள் அதிகம் கூடுகின்ற வரலாற்றுத்தலமான இடத்தில் மேலும் அதன் திருவிழா ஆரம்பித்திருக்கும் இந்தக் காலத்தில் இப்படி அடியவர்கள் நீராடும் நீர்நிலைக்குள் பார்வைக்குட்பட்ட தொலைவில் முதலை இருப்பது அடியவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காதா?



சென்றமுறை, நாங்கள் இரவுநேரமே சென்று அங்கே நீராடியுமிருந்தோம். அப்போது அந்த முதலை எங்கள் காலைப்பிடித்து கவ்விச்செல்லாமல் காப்பாற்றிய அந்த முருகனை  நினைக்கிறேன். உன் கருணையே கருணைதானப்பா.



அண்மையில் அதற்குள் இருந்து சில முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தாலும் இன்னும் சில எஞ்சியிருக்கின்றன.



நேற்றும் முதலை பிடிப்பதற்காக வலை விரித்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அதில் நாங்கள் காலையில் கண்ட அந்த முதலையொன்று வலையை அறுத்துவிட்டுச் சென்றதாக பிற்பகலளவில் அங்கே சிலர் பேசிக்கொண்டார்கள்.



திருவிழாவுக்கு முன்னரேயே அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கவேண்டும். அல்லது அந்த முதலையின் அச்சுறுத்தல் இல்லாமலிருக்க சம்பந்தப்பட்ட பிரதேச, உள்ளூராட்சி நிர்வாக அலகினர் தங்களிடமுள்ள சிறு முதலைப் பயன்படுத்தி அடியவர்கள் நீராடும் பகுதிக்காவது மட்டும் இரும்பாலான உறுதியான வலை அமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.கலியுகத்தின் முதலை வழிபட வந்த அடியவர்கள் ஆற்றிலிருக்கும் முதலையை எண்ணியபடியே நீராடி வரவேண்டியிருக்கிறது.



இதேவேளை, யாழ்ப்பாணத்தின் தேவையில்லாத இடங்களில் எல்லாம் தேவைக்கு அதிகமாக ATM வசதிகள் உண்டு. 



ஆனால் சந்நிதியின் சுற்றாடலில் எந்த வங்கியினதும் ATM இல்லை. GOOGLE ல் தேடினால் அருகில் ஒன்றுதானும் இல்லை. குறைவாக பணத்தைக் கொண்டுசென்ற ஒருவரோ... மேலும் பணத்தேவையுடைய ஒருவரோ... அல்லது பணத்தைத் தவறவிட்ட ஒருவரோ... சந்நிதியின் தொண்டுக்கு இன்னும் நன்கொடையளிக்க விரும்பிய ஒருவரோ...ஆபத்துக்கு பணம் எடுக்க அங்கு வசதியில்லை.



நான் நேற்று ATM ஐத் தேடியது என்முன்னால் கைநீட்டிவந்த யாசகர்களுக்கு என் இயல்புக்குத் தகுந்த ஏதாவது சிறுஉதவி வழங்கலாம் என்றுதான். இப்படி பலருக்கும் இவ்வாறான சங்கட நிலை சந்திப்பதாகவும் அவர் குறித்த பதிவியில் மேலும் தெரிவித்திருந்தார்.



.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை