Skip to main content

அதிகரிக்கும் வெப்பநிலை;அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கலாம்...

Aug 25, 2023 49 views Posted By : YarlSri TV
Image

அதிகரிக்கும் வெப்பநிலை;அடுத்த இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கலாம்... 

நிலவும் வெப்பமான காலநிலையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு செயற்படுவது தொடர்பில் யாழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட உரையின் போது “நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க அதிகளவு நீரை அருந்துங்கள். “ என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்,



தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை காணப்படுகின்றது இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.



குறிப்பாக மதிய வேளையில் அதிக வெப்பம் காணப்படுகின்றது குறிப்பாக நண்பகல் 11 மணி தொடக்கம் மாலை 2.00 மணி வரையான காலப்பகுதியில் அதிகமான வெப்பநிலை நிலவுகின்றது.



இந்த வெப்ப அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்று கூறும்போது நீரிழப்பு ஏற்படும் அதனை தடுப்பதற்கு போதியளவு நீர் ஆகாரம் எடுத்துக்கொமள்ள வேண்டும்.சாதாரணமாக வயது வந்தவர்கள் 2-3 லீற்றர் நீரை சாதாரணமாக அருந்த வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை விட அதிகளவு நீரை அருந்த வேண்டும்.குறிப்பாக சிறுவர்கள் 2 -3லீற்றர் நீர் அருந்துவது அவசியமாகும். 



அடுத்ததாக மதிய வேளைகளில் பிரயாணங்களை தவிர்ப்பதனால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம் குறிப்பாக மதிய நேரங்களில் சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் .



போதியளவு நீர் உள்ள பழ வகைகளை உட்கொள்ள வேண்டும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.பழங்கள் போதியளவு சாப்பிடும் பொழுது வெப்பத்தினால் ஏற்படும் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும் .



அதேபோல உடல் வெப்பநிலையை குறைப்பதற்காக நீராடுதல் குறிப்பாக காலை அல்லது மாலை வேலைகளில் நீராடுவதன் மூலம் உடல் வெப்பநிலையினை குறைக்க முடியும்.



வெப்பமுள்ள சூழ்நிலையில் சில வேளைகளில் சுவாசத் தொற்று நோய்  ஏற்படலாம்.ஆகவே பொது இடங்களிற்கு செல்லும்போது அவதானமாக இருக்க வேண்டும் குறிப்பாக தூசுகள் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் இவை மிகவும் முக்கியமாகும் எனவும் தெரிவித்தார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை