ஜவான் படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்...!
Aug 24, 2023 57 views Posted By : YarlSri TV
ஜவான் படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்...!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த ஒரு கைதியின் டைரி படம் மற்றும் விஜயகாந்த்தின் பேரரசு ஆகிய படங்களின் இன்ஸ்பிரேஷனில் உருவாகியுள்ளதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
ஷாருக்கானிற்கு முன்னதாக வெளியான ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்தப்படத்தையும் அவரது ரசிகர்கள் அதே வரிசையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 10 -ம் தேதி வெளியான பதான் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரம் அட்லீ படம் வரும்போதெல்லாம் அவர் மற்ற படங்களில் இருந்து நல்ல சீன்களை காப்பி அடித்து தனது படத்தில் கொடுப்பார் என்ற விமர்சனங்கள் வரும். அந்த வகையில் ஜவான் படத்தின் ட்ரைலரில் பல சூப்பர் ஹிட் படங்களின் காட்சிகள் இருப்பதாகவும், அட்லியின் காப்பி பேஸ்ட் வேலை ஜவானிலும் தொடர்ந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது ஜவான் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் வரை ஓடக்கூடியதாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதால் அந்த அளவுக்கு படத்தில் சுவாரஸ்யம் இருக்குமா? அதில் கொஞ்சம் தவறினாலும் படம் போரடித்துவிடும் என ரசிகர்கள் கேள்விகளை அடுக்கியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago