Skip to main content

ரஷ்ய விமான விபத்தில் Wagner கூலிப்படை தலைவர் உட்பட 10 பேர் பலி!

Aug 24, 2023 43 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய விமான விபத்தில் Wagner கூலிப்படை தலைவர் உட்பட 10 பேர் பலி! 

ரஷ்யாவில் தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.



விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் Wagner கூலிப்படையின் தலைவர் Yevgeny Prigozhin என்பவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



மொஸ்கோ நகரிலிருந்து Saint Petersburg நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவாக Wagner குழு போராடியிருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் இவர்களுக்கு இடையிலான தொடர்பில் விரிசல் ஏற்பட்டது.



இவ்வாறான பின்னணியில் Wagner கூலிப்படை தலைவர் பயணித்த குறித்த விமானம் விபத்திற்குள்ளானதில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.



விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை