Skip to main content

யூடியூப் பார்த்து பிரசவம் செய்த கணவர்... பரிதாபமாக உயிரிழந்த மனைவி...!

Aug 23, 2023 45 views Posted By : YarlSri TV
Image

யூடியூப் பார்த்து பிரசவம் செய்த கணவர்... பரிதாபமாக உயிரிழந்த மனைவி...! 

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த லோகநாயகிக்கும், தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷுக்கும் கடந்த 2021ல் திருமணம் நடைபெற்றது. லோகநாயகி கர்ப்பமான நிலையில், அவருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல் மாதேஷ் தவிர்த்துள்ளார். தடுப்பூசிகள் கூட போடாமல் இருந்துள்ளனர்.



இந்நிலையில், நேற்று அதிகாலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுக்க விரும்பிய மாதேஷ், அதற்காக யூடியூப் பார்த்து வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். நலமுடன் குழந்தை பிறந்த நிலையில், நஞ்சுக்கொடி வெளியேறாததால் லோகநாயகி சுயநினைவை இழந்துள்ளார்.



குள்ளனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த



சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை