Skip to main content

மாரி செல்வராஜ் படத்துக்கு பிறகு மீண்டும் பிரபல இயக்குநருடன் கை கோர்க்க தனுஷ் அதிரடி முடிவு!

Aug 22, 2023 48 views Posted By : YarlSri TV
Image

மாரி செல்வராஜ் படத்துக்கு பிறகு மீண்டும் பிரபல இயக்குநருடன் கை கோர்க்க தனுஷ் அதிரடி முடிவு! 

அருண் மாதேஸ்வரம் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டி50 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி நடித்து வருகிறார். வடசென்னை  பின்னணியில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடிக்க, விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்துள்ள அனிகா சுரேந்திரன் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.



இந்தப் படத்துக்கு பிறகு ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெயின்' என்ற படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்திலும்,  தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.



இதனையடுத்து தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படம் வெளிவராத நிலையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மீதிருக்கும் கூடுதல் நம்பிக்கையில் தனுஷ் இந்த முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை