Skip to main content

மதுரை மாநாடு தொடக்க விழாவில் ஹெலிகாப்டரில்எடப்பாடி பழனிசாமி!

Aug 18, 2023 60 views Posted By : YarlSri TV
Image

மதுரை மாநாடு தொடக்க விழாவில் ஹெலிகாப்டரில்எடப்பாடி பழனிசாமி! 

மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.



அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர். மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும். இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க பல லட்சங்கள் செலவும் செய்துள்ளனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை