Skip to main content

இன்று அதிகாலை கொழும்பில்  இடம் பெற்ற பேருந்து விபத்து

Aug 14, 2023 42 views Posted By : YarlSri TV
Image

இன்று அதிகாலை கொழும்பில்  இடம் பெற்ற பேருந்து விபத்து  

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை  கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



 மின்விளக்கு இன்றி பேருந்து இயங்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 



 விபத்தின் போது பேருந்தில் சுமார் 15 பயணிகள் இருந்ததோடு இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.





இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை