Skip to main content

காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி!

Aug 10, 2023 71 views Posted By : YarlSri TV
Image

காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி! 

அமெரிக்காவில் ஹவாய் தீவின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது. வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.



லஹைனா பகுதியிலும் காட்டுத் தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை