Skip to main content

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...

May 28, 2023 119 views Posted By : YarlSri TV
Image

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்... 

டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,



வெளியேறும் டொலர்களை தடுத்து வைத்தே ரூபாயினை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இந்த நிலைமை மாற வேண்டும். டொலர் சம்பாதிப்பதற்காக வழியை கண்டுபிடித்து ரூபாயின் பெறமதியை வலுப்படுத்த வேண்டும்.



தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது ரூபாயின் பெறுமதி வலுவடைவதனை பார்த்து எவ்வித திருப்தியும் அடைய முடியாது. எதிர்வரும் நாட்களில் கடன் செலுத்தவுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.



டொலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடியான நிலைமை ஒன்றை சந்திக்க நேரிடும் அபாயங்கள் அதிகமாக உள்ளது.



இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் அந்தந்த துறைகளினால் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை