Skip to main content

சூடானில் உள்நாட்டு போர் 150 பேரை சவூதி அரேபியா மீட்டது!

Apr 23, 2023 128 views Posted By : YarlSri TV
Image

சூடானில் உள்நாட்டு போர் 150 பேரை சவூதி அரேபியா மீட்டது! 

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.



வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது. சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 413 பேர் பலியாகி இருக்கிறார்கள். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



ஆனால் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதனால் அங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்டு கொண்டு வர, ராணுவ துடுப்புகளை அனுப்ப அதிபர் ஜோபைடன் உத்தர விட்டார். அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். தலைநகர் கார்டூமில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ராணுவம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை