Skip to main content

இந்தியாவின் கவனத்திற்குச் சென்றது இலங்கை குரங்கு சர்ச்சை

Apr 19, 2023 63 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவின் கவனத்திற்குச் சென்றது இலங்கை குரங்கு சர்ச்சை 

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக  நடவடிக்கை குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளது.



கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.



குரங்குகள், மிருகக்காட்சி சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டாலும், அதன் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.



இலங்கைக்கு உரித்தான குரங்குகளை சீனாவுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம், இந்தியாவினதும், இலங்கையினதும் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படும் என அந்த நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் உள்ள குரங்களுக்கும், இலங்கையில் உள்ள குரங்களுக்கும் மரபணு ரீதியான தொடர்புகள் உள்ளதுடன், கலாசார ரீதியான பிணைப்பும் உள்ளது.



எனவே, குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவிப்பதாக, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை