Skip to main content

காலிமுகத்திடலில் இனி இதற்குத் தடை

Apr 18, 2023 74 views Posted By : YarlSri TV
Image

காலிமுகத்திடலில் இனி இதற்குத் தடை 

ஏப்ரல் 20ஆம் திகதி முதல் காலி முகத்திடலில் இயற்கை அழகுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



எனினும் காலி முகத்திடல் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



இலங்கை துறைமுக அதிகார சபையானது காலி முகத்திடலின் அபிவிருத்திக்கு சுமார் 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறிப்பாக கடந்த போராட்ட காலத்தில் காலி முகத்திடல் பகுதியில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை