Skip to main content

அமெரிக்காவில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு! நால்வர் பலி

Apr 17, 2023 85 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு! நால்வர் பலி 

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்  4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



குறித்த கேளிக்கை விடுதியில் ஒரு சிறுவனின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



இந்த பார்ட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர். அப்போது பார்ட்டியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 



இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 



இந்த தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த விவரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை