Skip to main content

16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

Apr 13, 2023 71 views Posted By : YarlSri TV
Image

16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு 

மன்னார்  - சிலாவத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.



மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.



சட்டவிரோதமாக  இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளது.



குறித்த கடத்தல் பொருட்கள் யாவும்   மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டது.



மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டதுடன், இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை