Skip to main content

அந்தமானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! நடந்தது என்ன??

Apr 12, 2023 64 views Posted By : YarlSri TV
Image

அந்தமானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்! நடந்தது என்ன??  

மட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இலங்கை திரும்ப முடியாமல் அந்தமான் தீவுக் கூட்டங்களில்  தத்தளிக்கின்றார்கள். 



அவர்களை மீட்டெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



மீனவர்களான ஏ.எம். முஹாஜித் (வயது 34), எம்.எச்.எம். றிஸ்வி(வயது 35), பி.எம். இர்ஷாத்  (வயது 33) எம். அஸ்வர் (வயது 29) ஆகியோர்   மீன் பிடிக்கான அனுமதி பெற்றுக் கொண்டு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து வங்காளக் கடலுக்கு மீன்பிடிக்காக புறப்பட்டனர்.



அவர்கள் சென்ற படகின் இயந்திரம் செயலிழந்த நிலையில் அந்தமான் தீவில் சிக்கி இந்தியக் கரையோரக் காவல் துறையினர் அவர்களைக் காப்பாற்றி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.



ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்களை மீட்பதற்கான எந்த வித முயற்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான தங்களிடம் இந்த விடயத்தைச் சமர்பிக்கின்றோம் என்று மக்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர்.



இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் நஸீர் அஹமட், 



இந்த விடயத்திற்கு முன்னுரிமை அளித்து அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்களை மீட்டெடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை