Skip to main content

ட்ரம்ப் அமைப்புக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு!

Sep 22, 2022 78 views Posted By : YarlSri TV
Image

ட்ரம்ப் அமைப்புக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு! 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு எதிராக  மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



கடன் பெறுவதற்கும் குறைந்த வரி செலுத்துவதற்கும் ரியல் எஸ்டேட் மதிப்பு குறித்து பில்லியன் கணக்கில் ட்ரம்ப்இ பொய் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



2011-21ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ட்ரம்ப் அமைப்பு ஏராளமான மோசடி செயல்களை செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், ட்ரம்ப் இந்த வழக்கை மற்றொரு சூனிய வேட்டை எனக்கூறி நிராகரித்துள்ளார்.



முன்னாள் ஜனாதிபதியின் மூத்த குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரும்  ட்ரம்ப் அமைப்பின் இரண்டு நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க் மற்றும் ஜெஃப்ரி மெக்கனி ஆகியோருடன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.



மூன்று வருட சிவில் விசாரணைக்குப் பிறகு  மாநிலத்தின் மூத்த வழக்கறிஞரான நியூயோர்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.



கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யும் அதிகாரம் அவரது அலுவலகத்திற்கு இல்லை. ஆனால் கிரிமினல் தவறுகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்நாட்டு வருவாய் சேவையிடம் குறிப்பிடுகிறது.



327 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள ட்ரம்ப் டவரில் உள்ள ட்ரம்பின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்புகள் தவறாகக் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.



 



 



 



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை