Skip to main content

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!

Sep 21, 2022 64 views Posted By : YarlSri TV
Image

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்! 

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று சபையில் அறிவித்தார்.



இந்தச் சட்டமூலம் கடந்த 08 ஆம் திகதி மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 



அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 



வருடமொன்றில் கூட்டுமொத்தம் 120 மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும். இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும்.



இதற்கமைய 2022ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை