Skip to main content

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை – தமிழிசை!

Sep 19, 2022 71 views Posted By : YarlSri TV
Image

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை – தமிழிசை! 

மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் சம்ஸ்கார் பாரதி தமிழ்நாடு சார்பில் விடுதலை அமுத பெருவிழாவில் தாக்க்ஷாயினி ராமச்சந்திரன் எழுதி இயக்கி நடன அமைப்பு செய்த மூவர்ண நாட்டிய நாடகம் நடைபெற்றது.



அதில்இ சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.



தொடர்ந்து மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் 'நல்லதொரு நாடக நாட்டியம் நீங்கள் ரசித்து கொண்டிருந்தீர்கள். இடையில் கட்டயாமாக இடைவெளி விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.



நாடகம்இ நாட்டியம் பாடல்கள் பாரதியாரின் பாடல்கள் போல சுதந்திர கனலை ஊட்டியது வேறு இல்லை. 10 ஆண்டுகள் பாரதியாரை பாதுகாத்த மண் புதுச்சேரி. அதனால் தான் அதன் ஆளுநரான என்னை இந்த விழாவிற்கு அழைத்துள்ளனர்.



எல்லா கல்வி நிலையங்களிலும் இந்த நாடக நாட்டியத்தை போட்டுக் காட்ட வேண்டும். சுதந்திரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியதாயிற்று. 75 ஆவது சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாட வேண்டும் என்று பிரதமர் சொன்ன போது நான் பெரிதும் வரவேற்றன்.



தேசப் பற்று இருந்தது என்றால் நிச்சயமாக ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்போம். இதை பார்த்தால் தியாகத்தின் சரித்திரம் தெரியும். அறியப்படாத தியாகிகளின் சரித்திரத்தை தினம் தினம் படிக்க வேண்டும்.



திரைப்பட கலைஞர்கள் பற்றி தெரியும் அளவுக்கு இந்திய தரைப்படம் கிடைக்க போராடியவர்கள் பற்றி தெரியவில்லை என்று தான் வருத்தம். தேசம் என்றால் அந்த உணர்வு வர வேண்டும். தூக்கில் இடப்பட்ட கட்டபொம்மன் நெல் மணி கூட வரி தர முடியாது என்று சொன்ன பூலித்தேவன் பற்றி தெரிய வேண்டும்.



சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே அந்தமானில் தேசிய கொடி ஏற்றியவர் சுபாஷ் சந்திர போஸ். இந்த நிகழ்ச்சி நிச்சயம் தேச பக்தர்கள் உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டிற்கு உண்மையாக பக்தியாக இருக்க வேண்டும். நம் நாட்டின் பொருட்களை வாங்க வேண்டும்.



நாட்டிற்காக விளையாடுவது கூட தேசப் பற்று தான். உங்களை நீங்கள் மேம்படுத்தி முன்னிறுத்தி கொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றி பெற்று நம் நாட்டு கொடி ஏற்றும் போது இருக்கும் உணர்வு சிறந்தது.



அரசன் மனதை அமைதியாக்க பாடல்இ நாட்டியம் பார்ப்பார்கள். என் கோரிக்கைகோலாட்டம் மீண்டும் புழக்கத்தில் வர வேண்டும். நான் அதில் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு கலாசாரமும் மீண்டும் கொண்டு வர வேண்டும்.



முன் நாங்கள் பள்ளிக்கு செல்லும் போது பள்ளி பைகளில் இருக்கும் கோலாட்டம் கோலோச்ச வேண்டும். கொரோனா நமக்கு வணக்கம் தான் சொல்ல வேண்டும் வீட்டு வைத்தியம் மிளகுஇ இஞ்சி நல்லது என்றும் பாட்டி சொன்னதை சரி என்று சொல்லி கொடுத்தது.



முன்பெல்லாம் கிராமங்களில் காப்பு கட்டி கொள்வார்கள் மூட நம்பிக்கை என நினைத்தோம். மக்கள் கூடினால் தொற்று நோய்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக அப்படி வெளியூர்காரர்கள் வர கூடாது என்று சொன்னார்கள்.



கலாசாரத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து சொல்வோம். பாரதி பாடலை பாடிய பின் தற்கொலைக்கு எந்த குழந்தையாவது முயற்சி செய்யுமா. பலமான இந்தியர்களாக சுய சார்பாளர்களாக வலம் வருவோம். வெள்ளையன் வெளியேறினால்  குண்டூசி கூட செய்ய முடியாது என்றார்கள். இன்று 150 நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்து இருக்கிறோம்.



100 வது சுதந்திர தினத்தில் 2047 இல் இன்னும் 25 ஆண்டில் உலகிற்கே வழிகாட்டும். நாடாக மாறும் உலகிற்கே தலை தாங்கும் நாடாக உயர வேண்டும் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.



செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் 'மியான்மர்  தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை தேடி சென்ற இளைஞர்களை சிலர் கடத்தி சென்று சட்ட விரோதமாக வேலை வாங்குவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.



புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த ஒருவர் இது போன்று சிக்கி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அவரை பாதுகாக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.



எந்த நாட்டை சார்ந்தவர்கள் என்றாலும் துன்பப்பட கூடாது. கடைகளில் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்க கூடாது என்ற பாகுபாட்டை கூட பார்க்கிறோம். இதுபோன்ற பாகுபாடுகளை நம்மால் ஒப்புக் கொள்ளவே முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை