Skip to main content

போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு! விமர்சனங்களுக்கு பதிலடி

Jun 09, 2022 71 views Posted By : YarlSri TV
Image

போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு! விமர்சனங்களுக்கு பதிலடி 

பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தாம் பிரதமர் பொறுப்புக்கான பணிகளை தொடர்வதில் உறுதியுடன் உள்ளதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.



பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து இன்று முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இந்தக் கருத்தைக் தெரிவித்துள்ளார்.



போரிஸ் ஜோன்சன் தொடர்பில் கடுமையான விமர்சனம் 



பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது கருத்து வெளியிட்ட தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் ஏஞ்சலா ஈகிள், போரிஸ் ஜோன்சன் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.



போரிஸ் ஜோன்சன் அவரது சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே எந்த அளவிற்கு வெறுக்கப்படுகின்றார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கட்டாயம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு! விமர்சனங்களுக்கு பதிலடி



 



தற்போது பிரித்தானிய மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், கென்சவேட்டிவ் கட்சியின் உட்கட்சி பிளவுகளால் திசைதிருப்படுவதாகவும் பின்வரிசை உறுப்பினர்கள் 148 பேர் போரிஸ் ஜோன்சனை நம்பவில்லை என்றால் ஏன் நாடு நம்ப வேண்டும் எனவும் டேம் ஏஞ்சலா ஈகிள் கேள்வி எழுப்பியுள்ளார்.



அரசியல் வாழ்க்கையின் வெற்றி



எனினும் இதற்கு பதில் அளித்த போரிஸ் ஜோன்சன், தனது அரசியல் வாழ்க்கை தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அரசாங்கம் இதுவரை செய்யாத மிகப் பெரிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயங்களை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.



போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு! விமர்சனங்களுக்கு பதிலடி



தொழிற்கட்சியின் தலைவர் சேர் கெய்ர் ஸ்ராமர் மற்றும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பிரித்தானிய நாடாளுமன்ற தலைவர் இயன் பிளாக்ஃபோர்ட் ஆகியோரும் போரிஸ் ஜோன்சன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.



நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10 இல் நான்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருந்தனர்.



 



போரிஸ் ஜோன்சனுக்கு மீண்டும் அழுத்தம்



பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறி விருந்துபசாரங்களை நடத்தியமை தொடர்பில் அபராதம் பெற்றிருந்த போரிஸ் ஜோன்சன் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.



போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு! விமர்சனங்களுக்கு பதிலடி



 



இதனிடையே வரிகளை குறைக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.



இதன்மூலம் கென்சவேட்டிவ் கட்சியில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதுடன், அதிகரித்துவரும் வாழ்க்கை செலவை மக்கள் சமாளிப்பதற்கு உதவும் எனவும் பிரதமருக்கு ஆதரவான உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை