Skip to main content

பாரிய அளவில் உச்சம் தொடவுள்ள அரிசியின் விலை!

Jun 06, 2022 67 views Posted By : YarlSri TV
Image

பாரிய அளவில் உச்சம் தொடவுள்ள அரிசியின் விலை! 

நாட்டில் உள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள்,  வெளிச்சந்தையில் நெல் கொள்முதல் செய்வதற்கு போதுமானதாக இல்லை என்பதால் குறுகிய காலத்தில் அரிசியின் விலை சுமார் 500 ரூபாய் வரை உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உணவுப் பற்றாக்குறை, நெல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் நடுத்தர மக்கள் அரிசியை குவிக்கத் தொடங்கியுள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஊடக சந்திப்பு



பாரிய அளவில் உச்சம் தொடவுள்ள அரிசியின் விலை!



நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.



இது தொடர்பில் மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 



அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் தமது தொழில்துறையும் பாரிய ஆபத்தில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார். நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் எடுக்கின்றனர்.



அதிகரிக்கும் செலவினம்



பாரிய அளவில் உச்சம் தொடவுள்ள அரிசியின் விலை!



இதனிடையே சாக்கு, எரிபொருள், கூலி, உதிரி பாகங்கள், போக்குவரத்து செலவு உள்ளிட்ட அரிசியின் மொத்த செலவு உயர்ந்துள்ள சூழலில், ஒரு கிலோ அரிசியின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக உள்ளது.



இதேவேளை, ஒரு கிலோ அரிசியின் விலையை மேலும் 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை