Skip to main content

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பலி

Jun 04, 2022 70 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பலி 

உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.



கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து தனி நபர் ஒரு போராளியாக முன்வந்தார்.





"உக்ரைனில் நடந்த சண்டையில் பிரெஞ்சுக்காரர் ஒருவர் படுகாயமடைந்தார் என்ற சோகமான செய்தி எங்களுக்கு கிடைத்தது" என்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் வெற்றிபெறும்



 



இதேவேளை, ரஷ்யாவால் தொடங்கப்பட்ட போரில் உக்ரைன் வெற்றிபெறும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியாக தெரிவித்தார். உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கி இன்று 100வது நாளில் ரஷ்ய துருப்புக்கள் டான்பாஸ் பிராந்தியத்தைத் தாக்கிவருகிறது.



பிப்ரவரி 24 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப உத்தரவிட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர் மற்றும் நகரங்கள் இடிபாடுகளாக மாறிவிட்டன.



ரஷ்யாவிற்கு எதிரான போரில்  பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பலி



 



போரில் ரஷ்யாவின் முன்னேற்றத்தை உக்ரைனிய படைகள் கடுமையாக போராடி தலைநகரைச் சுற்றி இருந்து ரஷ்யர்களை விரட்டியது. இந்நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு விடியோவை வெளியிட்டார் .



அதில், "எங்கள் அணி மிகவும் பெரியது. உக்ரைனின் ஆயுதப் படைகள் இங்கே உள்ளன. மேலும் மிக முக்கியமானது என்னவென்றால், எங்கள் நாட்டின் குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள். ஏற்கனவே 100 நாட்களுக்கு உக்ரைனைப் பாதுகாத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை