Skip to main content

வலுவான நிலையில் இந்தியாவுடனான கூட்டாண்மை – பிளிங்கன்

Oct 14, 2022 64 views Posted By : YarlSri TV
Image

வலுவான நிலையில் இந்தியாவுடனான கூட்டாண்மை – பிளிங்கன் 

குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மூலம் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் தங்கள் கூட்டாண்மையை உயர்த்துவதில் உண்மையான முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.



இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான கூட்டாண்மை உலகில் மிகவும் ஆழானதாகும். இந்த நிலைமையனது எமது மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு உலகளாவிய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் உள்ளது.



குறிப்பாக சுகாதார பாதுகாப்பு, காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல் ஆகியவற்றுக்கு பெருமளவில் உதவுகின்றது.



அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா ஏற்கவுள்ளதோடு டிசம்பரில் இருந்து இந்தியா ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவியை வகிக்கின்றது என்றும் பிளிங்கன் குறிப்பிட்டார்.



முன்னதாக இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற குவாட் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அன்டனி பிளிங்கனை சந்தித்தார்.



இதன்போது குவாட்டின் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு நிலைநாட்டப்படுதல் மற்றும் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள், சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் கொள்கைகள் மதிக்கப்படும் பிராந்தியத்தை கட்டியெழுப்பல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அதீதமான கவனம் செலுத்தப்பட்டிருந்தது.



இதனையடுத்து ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில், குவாட் நாடுகள் சந்தித்து, ஐ.நா. சாசனத்திற்கான அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டியது, ஐ.நாவின் தூண்களாகச் செயற்பட்டு சர்வதேச அமைப்பை வலுப்படுத்துவதற்கும் சீர்திருத்துவதற்கும் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தியிருந்தன.



ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற இடங்களை விரிவுபடுத்துவது உட்பட விரிவான ஐ.நா.சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.



அதேநேரம்இ இக்காலத்தில் நடைபெற்ற குவாட் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் குவாட் பொறுப்புகளை வழங்குவதில் முன்னேற்றத்தை வரவேற்றது.



குறிப்பாக மே 2022 இல் குவாட் தலைவர்களால் அறிவிக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பகுதிக்கான 'குவாட்' மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண கூட்டாண்மையை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களில் கையெழுத்திடுதல் ஆகியன தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை