Skip to main content

இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!

Oct 13, 2022 78 views Posted By : YarlSri TV
Image

இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! 

அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.



போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சோதனை நேற்று நடைபெற்றது என்று மாநில ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.



குரூஸ் கப்பல் ஏவுகணை கடலுக்கு மேல் 2000 கிமீ (1240 மைல்கள்) பயணித்ததாக கே.சி.என்.ஏ மேலும் குறிப்பிட்டுள்ளது.



பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து ஐந்து ஆண்டுகளில் வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தப் போகிறது என்ற அச்சத்தை அதிகப்படுத்திய தொடர்ச்சியான ஆயுத ஏவுதல்களில் இது சமீபத்தியது.



எதிரிகளுக்கு இந்த சோதனை மற்றொரு தெளிவான எச்சரிக்கை என்று வலியுறுத்திய கிம், நாடு எந்த நேரத்திலும் எந்தவொரு முக்கியமான இராணுவ நெருக்கடியையும் போர் நெருக்கடியையும் உறுதியாகத் தடுக்கவும்இ முழுமையாக முன்முயற்சி எடுக்கும் என கூறினார்.



அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஏவுகணை சோதனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். வட கொரியாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவதாகக் அவர் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை