Skip to main content

சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

Oct 08, 2022 72 views Posted By : YarlSri TV
Image

சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவது அவசியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் ஊடகச் செயலாளர்களுக்கு அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அறிவிக்கும் செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.



இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் பேசியது போதும் என்றும் தான் கூறுவதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம் என்றும், அதிலிருந்து மீண்டு வருகின்றபோதிலும் பலர் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சரியான தகவல்களை வழங்குவதன் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இன்றைய மிகப்பெரிய பிரச்சினை மின்னணு ஊடகங்களோ அல்லது அச்சு ஊடகங்களோ அல்ல என்றும் சமூக ஊடகங்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை