Skip to main content

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கெர்சான் பகுதியில் உக்ரைன் படையினர் முன்னேற்றம்!

Oct 04, 2022 79 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கெர்சான் பகுதியில் உக்ரைன் படையினர் முன்னேற்றம்! 

ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட கெர்சான் பகுதியில் உக்ரைன் படையினர் முன்னேற்றம் கண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



உக்ரைனின் மிகக் கடுமையான போர் முனைகளில் ஒன்றாக திகழும் தெற்கே அமைந்துள்ள கெர்சான் பிராந்தியத்தில் கெர்ஷெனிவ்கா பகுதியிலுள்ள திசைக்காட்டி கம்பத்தில் உக்ரைன் தேசியக் கொடி பறக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.



இதேவேளை தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மூலோபாய நகரமான கெர்சனின் வடகிழக்கே டினீப்பர் ஆற்றின் மீது உக்ரைனிய துருப்புக்கள், ரஷ்ய நிலைகளை தாக்கியுள்ளன.



இந்த முன்னேற்றம் ரஷ்ய இராணுவம் மற்றும் பிராந்தியத்தில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



இதனைத்தொடர்ந்து கெர்சான் பகுதியில் உக்ரைன் படையினர் 'சற்று ஆழமாக' முன்னேறியுள்ளதாக அந்தப் பிராந்தியத்தில் ரஷ்ய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி கிரில் ஸ்ட்ரெமூசோவ் ஒப்புக்கொண்டுள்ளார்.



எனினும் அந்தப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பாதுகாப்பு இயந்திரங்கள் சரியான முறையில் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை