Skip to main content

மீனவர்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிப்பு!

Oct 04, 2022 59 views Posted By : YarlSri TV
Image

மீனவர்கள் அரசினால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிப்பு! 

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் அரசினால் பல வகைகளில் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து மகஜர் ஒன்றில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று திருகோணமலை மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம்பெற்றது.



அகில இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்பாடானது

திருகோணமலை கடற் பகுதிகத்ளில் சிறு படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருபவர்களுக்காக மானியத்தொகை ஒன்று, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் மாதாந்தம் 15000 ரூபா வீதம் 3 மாதங்களுகான கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் குறித்த கொடுப்பனவானது சில காரணங்களின் நிமித்தம் இன்னமும் பலருக்கு வழங்கப்படவில்லை என்பதனை மேற்கோள் காட்டி முன்னெடுக்கப்பட்டது.



குறிப்பாக திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்களத்தினால் இயந்திரம் இல்லா படகுகளில் மீன்பிடிப்பவர்கள் பட்டியலில் 1758 மீனவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் 783 மீனவர்களுக்கு மாத்திரமே குறித்த தொகையானது வழங்கப்பட்டிருக்கிறது இதன் காரணமாக பல மீனவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.



அத்துடன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக குறித்த கோரிக்கைகள் அடங்கிய கையெழுத்திடப்பட்டு மகாஜர் ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிமித்தமாக அனைத்து பகுதிகளை சேர்ந்த மீனவர்களாலும் ஒப்பமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை