Skip to main content

நியுயோர்க்கில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார் ஜெய்சங்கர்!

Sep 29, 2022 85 views Posted By : YarlSri TV
Image

நியுயோர்க்கில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டார் ஜெய்சங்கர்! 

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்திற்காக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நியுயோர்க்கை சென்றடைந்திருந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.



முன்னதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் மற்றும் கொன்சூல் ஜெனரல் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஆகியோர் அவரை வரவேற்றனர்.



தொடர்ந்து ஜெய்சங்கர் இருதரப்பு, பன்முக மற்றும் பலதரப்பு சந்திப்புகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ ஈடுபாடுகளை ஜெய்சங்கர் நடத்திவருகின்றார்.



கடந்த சனிக்கிழமை 'இதுவொரு நீர்நிலை தருணம் ஒன்றோடொன்று சவால்களுக்கு மாற்றும் தீர்வுகள்' என்ற கருப்பொருளில் அவர் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.



தொடர்ந்து பாதுகாப்புச் சபையின் சீர்திருத்தங்கள் ஜெய்சங்கரின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையான காணப்பட்ட நிலையில் உலகத்தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் அவ்விடயம் குறித்து பரஸ்பர கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பாதுகாப்புச் சபை தொடர்பான யோசனைகளை முன்வைத்து ஏனைய தலைவர்களுடன் கலந்தாலோசித்தமையால் சீர் திருத்தம் பற்றிய அமர்வின் போது இந்தியாவுக்கு பல்வேறு ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டன என்று அமெரிக்க நிரந்தர பிரதிநிதி லிண்டா தாமஸ்-கிரீன்பர்க் கூறுகிறார்.



மொத்தமாக 11நாட்கள்  அமெரிக்கவுக்கான பயணம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில்இ ஜெய்சங்கர் இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய குவாட் நாடுகளையும் பிரிக்ஸ் குழுவின் அங்கத்துவ நாடுகளையும் சந்திக்கவுள்ளார்.



இதேவேளை தேசத்தின் 75ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் ஜெய்சங்கரின் வருகையின் அமெரிக்க பயணம் 'இந்தியாளூ75 ஐ.நா. உடனான புதுடில்லியின் ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய அதன் பயணத்தில் இந்தியஇ ஐ.நா. கூட்டாண்மையை வெளிப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் விசேட நிகழ்வொன்றிலும் ஜெய்சங்கர் பங்கேற்றிருந்தார்.



கொரோனா பரவலுக்குப் பின்னர் 153 நாட்டுத்தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் மூன்று துணைப் பிரதமர்கள் மற்றும் 34 வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூடட்டமாக பொதுச்சபை அமர்வு காணப்படுகின்றது.



நியுயோர்க்கிற்கான தனது பயணத்தை முடித்துக் கொண்ட ஜெய்சங்கர் அடுத்த மூன்று நாட்களுக்கு வொஷிங்டனுக்குச் சென்றிருந்தார்.



அந்தப்பயணம் 'பன்முக இருதரப்பு நிகழ்ச்சி நிரலின் உயர்மட்ட மதிப்பாய்வு மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியது' என்றும் இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை ஒருங்கிணைப்பதாக இருந்தது என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை