Skip to main content

இலங்கையில் 80 வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Sep 29, 2022 48 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் 80 வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு  

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 34 வீதமானவர்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர்  சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.



கழுத்தின் ஓரங்களை அழுத்துவது போல் கடுமையான வலிஇ கையின் மேலிருந்து கீழாக ஏற்படும் வலிஇ வயிற்றில் கடுமையான வலிஇ தோள்களில் வலி என்பன மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நோய் நிபுணர் மருத்துவர் சம்பத் விதானவாசம் தெரிவித்துள்ளார்.



அத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்வது கட்டாயமாகும் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.  மேலும் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அது இதயத்தின் பாதிப்பை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.  



இன்று உலக இருதய தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை