Skip to main content

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்

Mar 29, 2022 62 views Posted By : YarlSri TV
Image

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் 

புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.



நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.



முதலமைச்சராக பதவியேற்ற பிரமோத் சாவந்துடன் எட்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.



 





இதனை



தொடர்ந்து புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரமோத் சாவந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.



அதில், புதிய நிதியாண்டு முதல், 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சாவந்த், இரும்புத் தாது சுரங்க தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். 



கோவா சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.



இந்நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கோவா முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை